செய்திகள்

பேச்சுவார்த்தைக்கும் ஓ.பி.எஸ் சுற்றுபயணத்திற்கும் தொடர்பு இல்லை: கே.பி. முனுசாமி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் தொடர்பு இல்லை என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

நிபந்தனை இல்லாத பேச்சவார்த்தைக்கு நாங்கள் தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நிபந்தனையை ஏற்காவிட்டால் பேச்சுவார்த்தை இல்லை என்று ஓ.பி.எஸ். அணி தரப்பில் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஓ. பி.எஸ் ஆதரவாளர் கே.பி. முனுசாமி கிரீன்வேஸ் சாலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திக்கிறார். காஞ்சீபுரம் மாவட்டத்தில் 5-ந் தேதி சுற்றுபயணத்தை தொடங்குகிறார்.


உள்ளாட்சி தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும் என தொண்டர்களுக்கு அறிவுரை வழங்க சுற்றப்பயணத்தை ஓ.பி.எஸ். மேற்கொள்கிறார்.

சுற்றுப்பயணத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் தொடர்பு இல்லை. நாடு, மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் நிபந்தனை வைத்தோம். அதனை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.