போரூர்:
கோயம்பேடு பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் நேற்று இரவு பணி முடிந்து நண்பருடன் வீடு திரும்பி கொண்டிருந்தார். மார்க்கெட் அருகே ‘ஏ’ சாலை வழியாக வந்த போது 5 பேர் கொண்ட கும்பல் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் கோயம்பேடு போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜ் ஆகியோர் இங்கு விரைந்து சென்றனர். பூமார்க்கெட்டில் பதுங்கி இருந்த சீமத்தம்மன் நகரை சேர்ந்த சரண் (21), ஆவடியை சேர்ந்த சிவா(23), வியாசர்பாடியை சேர்ந்த பாண்டியன் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கத்தி, 2 ராடு போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.