செய்திகள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் எம்ஜிஆர் பெயர் பலகை பொருத்தப்பட்டது

கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகையும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. #CMBT #MGRBusStand

மாலை மலர்

சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியது.

37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோயம்பேடு பஸ் நிலையம் ரூ.103 கோடி செலவில் கட்டப்பட்டது. தினமும் 2 ஆயிரம் பஸ்களையும், 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது.

இங்கிருந்து தினமும் 573 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளியூர் பஸ்களுக்காக 6 பிளாட் பாரங்கள் உள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் செல்கின்றன.

தி.மு.க. ஆட்சியின் போது கருணாநிதி இந்த பஸ் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். 2002-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். சென்னை புறநகர் பேருந்து நிலையம் என்று அழைக்கப்பட்டது.