செய்திகள்

உடல் தானம் செய்ய வாருங்கள்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சத்குரு கபீர் மகோத்சவ விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசுகையில், உடல் தானம் செய்ய வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மாலை மலர்

போபால்:

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியில் அமைந்துள்ள லால் பரேட் மைதானத்தில் சத்குரு கபீர் மகோத்சவம் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சத்குரு கபீரின் போதனைகளை மக்கள் தங்களது வாழ்வில் பின்பற்ற வேண்டும். இன்றும் பல்வேறு மக்களுக்கு தேவையான உடல் உறுப்புகள் கிடைப்பதில்லை. இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் உடல் தானம் மற்றும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும். இப்படி செய்வதால் மற்றவர்களின் வாழ்வை வளமாக்க முடியும். உடல் தானத்துக்கு நானாஜி தேஷ்முக் மிக சிறந்த உதாரணமாக விளங்குகிறார். அதனால் பொதுமக்களும் தங்களது உடலை தானமாக அளிக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.