தேசிய மனித உரிமை ஆணையம் 
செய்திகள்

குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் - ராஜஸ்தான் அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ராஜஸ்தான் மருத்துவமனையில் 100-க்கு மேற்பட்ட குழந்தைகள் இறந்தது குறித்து அறிக்கை அளிக்கவேண்டும் என அம்மாநில அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

மாலை மலர்

புதுடெல்லி:

ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 100-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில், ராஜஸ்தானில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என அம்மாநில அரசை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜஸ்தானின் கோடா மருத்துவமனையில் 100-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக நான்கு வாரத்துக்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.