பணம் பறிப்பு 
செய்திகள்

ஆட்டோவில் சென்ற வாலிபரை தாக்கி பணம் பறிப்பு

கொருக்குப்பேட்டை அருகே ஆட்டோவில் சென்ற வாலிபரை தாக்கி பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.கே.நகர்:

கொருக்குப்பேட்டை, சி.பி. ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். நேற்று இரவு அவர் கொருக்குப்பேட்டையில் இருந்து மூல கொத்தளத்திற்கு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோவில் இருந்த சிலர் சுதாகரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்தனர். மேலும் அவரை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளி விட்டு சென்று விட்டனர். இதில் சுதாகர் காயம் அடைந்தார்.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.