செய்திகள்

கொருக்குப்பேட்டையில் இன்று அதிகாலை சரக்கு ரெயில் தடம் புரண்டது

கொருக்குப்பேட்டை ரெயில் அருகே இன்று அதிகாலை சரக்கு ரெயில் தடம் புரண்டதால் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

ராயபுரம், ஜூன். 13-

தண்டையார்பேட்டை ரெயில்வே யார்டில் இருந்து, மதுரைக்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது.

கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் அருகே வந்த போது இந்த சரக்கு ரெயில் திடீரென்று தடம் புரண்டது. இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எக்ஸ்பிரஸ் ரெயில் களும், மின்சார ரெயில் களும் செல்லும் தண்டவாளங் களுக்கு இடையே தடம் புரண்ட சரக்கு ரெயில் பெட்டி நின்றது. இதனால் அந்த வழியில் செல்லும் ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

இதன் காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து டெல்லி புறப்பட்ட விரைவு ரெயில் நிறுத்தப் பட்டது. டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்து நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்துக்கு முன்பாக நிறுத்தப்பட்டது. சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் மின்சார ரெயில் களும், அங்கிருந்துசென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயில் களும் நிறுத்தப்பட்டன.

இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்த னர். தடம் புரண்ட சரக்கு ரெயிலை மீண்டும் சரிசெய்யும் பணியில் 80 ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். 4 மணி நேரத்துக்குப் பிறகு சரக்கு ரெயில் மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது.

காலை 8.30 மணிக்கு பிறகு இந்த வழியில் ரெயில் போக்குவரத்து சீரானது. அதன்பிறகு அனைத்து ரெயில் களும் வழக்கம் போல் ஓடத் தொடங்கின.

SCROLL FOR NEXT