செய்திகள்

கொரட்டூர் ஏரியில் வாலிபர் வெட்டிக்கொலை

கொரட்டூர் ஏரியையொட்டி கெனால் சாலையில் இன்று காலை வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அம்பத்தூர்:

கொரட்டூர் ஏரியையொட்டி கெனால் சாலையில் இன்று காலை வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கொரட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமி‌ஷனர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கொலையுண்ட வாலிபருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. அவரது உடல் முழுவதும் பலத்த வெட்டிக்காயங்கள் காணப்பட்டன.

உடல் கிடந்த இடம் அருகே மதுக்கடை உள்ளது. எனவே அங்கு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மதுக்கடை முன்பு கண்காணிப்பு கேமிரா உள்ளது. அதில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT