சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் ராஜ்கண் (37). தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது அக்காள் மகள் ஜெயசுதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தர்சன் (8), அருண்குமார் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக ஜெயசுதா, ராஜ்கண்ணை பிரிந்து கொரட்டூர் கெனால் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது தாய் சுகுணா வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது 2 மகன்களையும் அவர் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார். இதனால் தனிமையில் தவித்த ராஜ்கண் பலமுறை நேரில் சென்று குடும்பம் நடத்த வருமாறு ஜெயசுதாவை அழைத்தார். ஆனால் அவர் அதற்கு உடன்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி ராஜ்கண் ஜெயசுதாவை அழைத்து வரும் எண்ணத்தில் மீண்டும் கொரட்டூர் சென்றார். அப்போது 11-வது மாடியில் வைத்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் பால்கனியில் இருந்து ஜெயசுதா தவறி விழுந்து பலியாகி விட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஜெயசுதாவின் மரணத்தில் அதிரடி திருப்பமாக கணவர் ராஜ்கண்ணே 11-வது மாடியில் இருந்து அவரை கீழே தள்ளி விட்டு கொலை செய்திருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. தற்கொலை என்று போலீசாரால் முடித்து வைக்கப்பட்டிருக்க வேண்டிய வழக்கு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரால் உயிர் பெற்றுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட ஜெயசுதா. கணவர் ராஜ்கண்
அப்போது எதிரில் உள்ள குடியிருப்பில் 11-வது மாடியில் சிறிய பால்கனியில் நின்றபடியே ஜெயசுதாவும், ராஜ்கண்ணும் பேசிக் கொண்டிருந்தனர். ஜெயசுதா கூச்சல் போட்டுள்ளார். ராஜ்கண் அவரை பிடித்து கீழே தள்ள முயற்சித்துள்ளார். இதற்கு பயந்தே ஜெயசுதா கூச்சல் போட்டுள்ளார். இதனை நேரில் பார்த்த முரளி, ராஜ்கண்ணுவிடம், டேய்.... வேண்டாம். நான் ஒரு போலீஸ் அதிகாரி, உனக்கு உதவி செய்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் ராஜ்கண் இதனை கேட்காமல் ஜெயசுதாவை பிடித்து கீழே தள்ளி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயசுதா துடிதுடித்து பலியாகி விட்டார்.