செய்திகள்

முத்துப்பேட்டையில் கோரையாற்றில் மூழ்கி முதியவர் பலி

கோரையாற்றில் மூழ்கி முதியவர் பலியானார். அவர் தவறி விழுந்து மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாலை மலர்

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கீழவாடியகாடு பகுதியை சேர்ந்தவர் மன்மதன் (வயது 60). இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு செல்வதாக புறப்பட்டு சென்ற மன்மதன் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.

இந்த நிலையில் கோரையாற்று சட்ரசில் ஒரு ஆண் பிணம் இன்று காலை மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். இதுபற்றி முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தது மன்மதன் என தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோரையாற்று சட்ரசில் மன்மதன் தவறி விழுந்து மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.