தற்கொலை 
செய்திகள்

கொரடாச்சேரி அருகே முதியவர் தற்கொலை

கொரடாச்சேரி அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருவாரூர்:

கொரடாச்சேரியை அடுத்த மேலதிருமதிகுன்னம் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (வயது 70).

இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதில் மனமுடைந்த அவர் எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி நடேசனின் மகன் கென்னடி கொரடாச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.