செய்திகள்

சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை

மராட்டிய மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் சிறுமியை கற்பழித்து கொன்ற வழிக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மாலை மலர்

அகமத்நகர்:

மராட்டிய மாநிலம் அகமத்நகர் மாவட்டம் கோபர்டி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் கற்பழித்து கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக ஜிதேந்திர ஷிண்டே(வயது25), சந்தோஷ் பாவல் (36), நிதின் (26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு அகமத்நகர் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. கடந்த அக்டோபர் மாதம் 350 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 31 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது குற்றவாளிகள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதை எதிர்த்து 3 பேரும் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யலாம் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.