செய்திகள்

கொண்டலாம்பட்டி அருகே லாரி மோதி கட்டிட தொழிலாளி காயம்

கொண்டலாம்பட்டி அருகே லாரி மோதி கட்டிட தொழிலாளி காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொண்டலாம்பட்டி:

தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் இருந்து செங்கல்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புதுக்கோட்டை வந்து நேற்று கொண்டிருந்தது. அந்த லாரி நாமக்கல் வழியாக செல்வதற்காக சேலம் வந்தது. இரவு 10.30 மணியளவில் சேலம் சீலநாய்க்கன்பட்டி ரவுண்டானா அருகே வந்தபோது ஒரு வாலிபர் ரோட்டை கடக்க முயன்றார். அவர் மீது லாரி மோதாமல் இருக்க வண்டியை டிரைவர் திருப்பி உள்ளார். ஆனாலும், வண்டியின் ஓரம் அந்த வாலிபர் மீது மோதியது.

இதில் அடிப்பட்டு காயம் அடைந்த வாலிபர் அதே மயங்கி விழுந்தார். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 25). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளது என்பது தெரியவந்தது.

SCROLL FOR NEXT