கைது 
செய்திகள்

கொண்டலாம்பட்டி அருகே மதுவிற்றவர் கைது

கொண்டலாம்பட்டி அருகே மதுவிற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கொண்டலாம்பட்டி:

கொண்டலாம்பட்டி அருகே எஸ்.நாட்டாமங்கலம் பகுதியில் உள்ள மாதேஸ்வரன் கரடு அடிவாரத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதாக கொண்டாலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு மதுவிற்ற அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது 57) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.