செய்திகள்

சம்பள உயர்வு கேட்டு சட்டசபை முன்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது

மேற்கு வங்கத்தில் சம்பள உயர்வு கேட்டு சட்டசபை முன்பு போராட்டம் நடத்திய அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக தொடர்ந்து போராட்டமும் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், இன்று சட்டசபையை நோக்கி ஊர்வலமாகச் சென்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், சட்டசபைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.