நவராத்திரி, தசரா, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் மிகப்பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டு வெகு சிறப்பாக துர்கா பூஜை நடைபெற்று வருகிறது.
மும்பை நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பந்தல்களில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் துர்கை அம்மனை வழிபாடு செய்தனர்.
இந்நிலையில், கொல்கத்தா நகரின் 33 பெலியாகட்டா பள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பூஜை பந்தலில் வேத மந்திரங்களுடன் மசூதியின் பாங்கோசை, கிறிஸ்தவ தேவாலயத்தின் மணியோசையும் இணைந்து ஒலிக்கின்றது. மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழும் இந்த பூஜை பந்தல் ஊடகங்கள் மூலம் மிகவும் பிரபலமாகி வருகின்றது.