தொடக்க ஆட்டத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. பின்னர் தென்ஆப்பிரிக்கா, வங்காள தேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மறுமுனையில் பாகிஸ்தான் அணி இலங்கை, தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தை வீ்ழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது. லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து 2-வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
அதேபோல்தான் பெண்கள் அணிக்கும் நடந்துள்ளது. இந்திய பெண்கள் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை, அதன் சொந்த மண்ணிலேயே இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றது.
அரையிறுதியில் வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று இங்கிலாந்து அணியை இறுதிப் போட்டியில் சந்தித்தது. இதில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்து முதன்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது.