செய்திகள்

கொடநாடு பங்களாவில் கொலை- கொள்ளை: கோத்தகிரி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை இன்று தாக்கல்

கொடநாடு ஜெயலலிதாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கோத்தகிரி நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.

மாலை மலர்

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கொடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் தேயிலை தோட்டம் உள்ளது.

கடந்த ஏப்ரல் 24-ந்தேதி இரவு இந்த பங்களாவுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தனர். இதனை தடுக்க வந்த கிருஷ்ணபகதூரை தாக்கினர். பின்னர் பங்களாவில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் இறந்தார். சயன் என்பவர் மனைவி, குழந்தையுடன் சென்றபோது பாலக்காட்டில் கார் விபத்தில் சிக்கினார். இதில் அவரது மனைவி மற்றும் குழந்தை இறந்தது. படுகாயம் அடைந்த சயன் சிகிச்சைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கொடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் இன்று கோத்தகிரி போலீசார் கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர்.