பெருமாள்மலை:
கொடைக்கானல் மலை கிராமங்களான மன்னவனூர், கும்பூர், கீழானவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்போது அத்திப்பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது. சீசன் களைகட்டியுள்ள நிலையில் மலை கிராமங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.
இனிப்பு சுவை உடைய இந்தப்பழங்கள் மருத்துவ குணம் கொண்டதாகும். குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படக் கூடிய நரம்புத்தளர்ச்சி, உடல் சோர்வு ஆகியவற்றை போக்கி புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது.
நேரடியாக சுற்றுலா பயணிகள் இங்கு வந்து பழங்களை சுவைத்து அதனை தங்கள் வீடுகளுக்கும் வாங்கிச் செல்கின்றனர். இதனால் அத்திப்பழம் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.