செய்திகள்

கொடைக்கானல் அருகே மதுபானம் விற்ற 3 பேர் கைது

கொடைக்கானல் அருகே அனுமதியின்றி மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

கொடைக்கானல்:

கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கி, அட்டுவம்பட்டி, வாழைக்காட்டு ஓடை போன்ற பகுதிகளில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையொட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜா தலைமையில் போலீசார் தீவிர சோதனை செய்தனர். அப்போது மாட்டுப்பட்டி பகுதியில் மது விற்பனை செய்த மணிகண்டன் (வயது 28), குருசாமி (45), வாழைக்காட்டு ஓடையில் ஆரோக்கியதாஸ் ராஜா (40) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

மேலும் அவர்களிடம் இருந்த 30 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews