கோப்பு படம் 
செய்திகள்

மின்சார ரெயிலில் ரெயில்வே ஊழியருக்கு கத்திக்குத்து

அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரெயிலில் ஊழியருக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடி:

அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த 2 ரெயில்வே ஊழியர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மற்றொருவரை குத்தினார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆவடி ரெயில்வே போலீசார் கத்திக் குத்து காயம் அடைந்த ரெயில்வே ஊழியரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். கத்தியால் குத்தியவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT