செய்திகள்

இந்திய அணியின் டாப் பினிஷராக ஐபிஎல் அனுபவம் உதவும்- கேஎல் ராகுல்

ஐபிஎல் தொடரில் விளையாடிய சிறப்பான அனுபவம் இந்திய அணியின் டாப் பினிஷராக உதவும் என கேஎல் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #KLRahul

மாலை மலர்

இங்கிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடித்துள்ள அவர், ஐபிஎல் தொடரின் அனுபவம் இந்திய அணியின் டாப் பினிஷராக உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேஎல் ராகுல் கூறுகையில் ‘‘டி20 போட்டியில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும் என்பதை நான் எப்போதுமே நம்புகிறவன். குறிப்பாக டி20-யில் ஒவ்வொரு பந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு பந்திலும் போட்டியின் நிலை மாறும். அணிக்கு என்ன தேவையோ அதை கருதி, அதற்கேற்றபடி விளையாட வேண்டும். இந்தியாவிற்காக கடந்த இரண்டு மூன்று வருடங்கள் நான் விளையாடியபோதிலும், ஐபிஎல் 2018-ல் உள்ள அனுபவத்தை பயன்படுத்துவேன்.

மனது அமைதியான நிலையில் இருக்கும்போது சிறப்பான ஆட்டம் வெளிவரும். இதைத்தான் ஐபிஎல் தொடரில் நான் செய்தேன். அணிக்காக போட்டியை பினிஷ் செய்து கொடுக்க வேண்டும் என்பதில்தான் என் கவனம் இருந்தது. ஒரு வீரராக அணிக்கு போட்டியை பினிஷ் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது, அந்த சூழ்நிலையை வீரர்கள் விரும்புவார்கள்.