கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 
செய்திகள்

பயிற்சியாளர்கள் பதவிக்கு இவர்களை குறி வைக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கல்லீஸ் விலகிய நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சரியான நபரை நியமிக்க தீவிரம் காட்டி வருகிறது.

மாலை மலர்

இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புதிய பயிற்சியாளர்களை தேடிவருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. இங்கிலாந்து அணிக்கு பெய்லிஸ் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் ஆஷஸ் தொடரோடு முடிவடைகிறது. அதன்பின் பெய்லிஸ் அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கேகேஆர் பெய்லிசை தலைமை பயிற்சியாளராக நியமிக்க விரும்புகிறது. ஒருவேளை இங்கிலாந்து அணியின் பயற்சியாளர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை  எனில், பெய்லிசை அடித்த நொடியே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்து விடும்.