செய்திகள்

புதிய அட்டர்னி ஜெனரலாக கே.கே. வேணுகோபால் நியமனம்

புதிய அட்டர்னி ஜெனரலாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் கே.கே. வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

புதுடெல்லி:

மத்திய அரசின் தலைமை வக்கீலாக (அட்டர்னி ஜெனரல்) இருந்து வந்த முகில் ரோத்தசியன் 3 ஆண்டு பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்தது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு முன் வந்தது. ஆனால் அவர் தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் புதிய அட்டர்னி ஜெனரலாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் கே.கே. வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். 83 வயதான அவர் கேரள மாநிலம் காசர்கோட் மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னை ஐகோர்ட்டிலும் வக்கீலாக பணியாற்றியவர் ஆவார்.