மரணம் 
செய்திகள்

கே.கே.நகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்

கே.கே.நகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி:

திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் முருகேசன் (வயது 56). கடந்த 5-ந்தேதி இரவு வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

 இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

SCROLL FOR NEXT