சென்னை:
தேனாம்பேட்டை ஜெயமால் தெருவைச் சேர்ந்தவர் ஊர்மில் டோலியா. கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலையில் உள்ள செல்போன் சர்வீஸ் கடையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி கலைச்செல்வி, மகன் மாதவ் டோலியா (வயது7). ஊர்மில் டோலியா கடந்த 15 நாட்களாக உடல் நலம் சரியில்லாததால் வேலைக்கு செல்லவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு ஊர்மில் டோலியா மொபைல் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் கடையை விரைவாக மூடிவிட்டு செல்லுமாறு கூறினார். பின்னர் தனது மகன் மாதவ் டோலியாவை கடைக்கு அழைத்து செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றார்.
இரவு வெகுநேரமாகியும் கணவர்-மகன் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த கலைச்செல்வி கடை ஊழியரை போனில் தொடர்பு கொண்டு கடைக்கு சென்று பார்க்குமாறு கூறினார்.
ஊழியர் மொபைல் கடைக்கு சென்று பார்த்த போது ஊர்மில் டோலியா, மாதவ் டோலியா இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தனர். இரண்டு கைகளும் வெட்டப்பட்ட நிலையில் சிறுவன் கிடந்தான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் சிறுவன் மாதவ் டோலியா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஊர்மில் டோலியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஊர்மில் டோலியா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் கடன் பிரச்சனையால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு மகனை கடைக்கு அழைத்து சென்று கத்தியால் அவனின் இரண்டு கைகளின் மணிகட்டையும் அறுத்து கொன்று விட்டு தனது கைகளை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். #Tamilnews