வங்கி கணக்கு முடக்கம் 
செய்திகள்

திருவாரூரில் கிசான் முறைகேடு: 1,600 நபர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிசான் முறைகேடு நடைபெற்றுள்ள நிலையில் திருவாரூரில் 1,600 நபர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

விவசாயிகளுக்கு உதவுவதற்கான மத்திய அரசு கிசான் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோர் முறைகேடாக பயன்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. திருவாரூர், கிருஷண்கிரி என பல்வேறு மாவட்டங்களில் இந்த முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தோர் முறைகேடாக இணைந்து பயன்பெற்றதாக தெரியவந்தது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 1,600 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் இணை இயக்குனர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.