கிரண் ரிஜிஜூ 
செய்திகள்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.7 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.4 லட்சமும் வழங்கப்படும் என விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

புதுடெல்லி:

கஜகஸ்தானில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். இதேபோல், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா மற்றும் ரவிகுமார் தஹியா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

இந்நிலையில், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றவருக்கு ரூ.7 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு தலா ரூ.4 லட்சமும் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் தீபக் புனியாவுக்கு 7 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா மற்றும் ரவிகுமார் தஹியா ஆகியோருக்கு தலா 4 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டும் என விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT