தாய்லாந்து
தாய்லாந்தில் உள்ள புரிராம் நகரில் கிங்ஸ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இதில் 4 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில், பிஃபா தரவரிசையில் 82-ஆவது இடத்தில் உள்ள கியூராகாவ் அளியுடன், பிஃபா தரவரிசையில் 101-ஆவது இடத்தில் உள்ள இந்திய அணி மோதியது.
பல ஐரோப்பிய லீக் போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ள வீரர்களை கொண்ட கியூராகாவ்அணி தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. கியூராகாவ் அணி வெறும் 20 நிமிடங்களுக்குள் 3 கோல்களை அடித்தது. அந்த அணி சார்பில் ரோலி போன்வசியா, எல்ஸன் ஹூய், லின்ட்ரோ பகுணா ஆகியோர் கோலடித்து அசத்தினர்
இந்திய தரப்பில் கேப்டன் சுனில் சேத்ரி 31-வது நிமிடத்தில் ஒரே ஒரு ஆறுதல் கோல் அடித்தார். இறுதியில் 1-3 என்ற கோல் கணக்கில் கியூராகாவ் அணியிடம் வீழ்ந்தது இந்தியா.
இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் தாய்லாந்து அணி, வியட்நாம் அணியிடம் தோல்வி அடைந்தது. இதையடுத்து 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தாய்லாந்து- இந்திய அணிகள் நாளை மறுநாள் மோதுகின்றன.