செய்திகள்

அம்மாப்பேட்டை அருகே கணவரை கொலை செய்த பெண் கைது

அம்மாப்பேட்டை அருகே வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்த கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

அம்மாப்பேட்டை:

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள அருந்தவபுரம், ராஜபுரத்தை சேர்ந்தவர் மணி (வயது 55). இவருடைய மனைவி அன்புமணி (50). கணவன் - மனைவி இருவரும் கூலிதொழிலாளிகள்.

இந்த நிலையில் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்ததாக கூறி அன்புமணி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவதன்று கணவன் வீட்டிற்கு வந்த போது மனைவி அன்புமணி எண்ணெயை கொதிக்க வைத்து மணி மீது ஊற்றிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த மணி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குபதிவு செய்து அன்புமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.