மின்சாரம் நிறுத்தம் 
செய்திகள்

கீழ்பென்னாத்தூர், வந்தவாசியில் நாளை மின்நிறுத்தம்

கீழ்பென்னாத்தூர், வந்தவாசியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாலை மலர்

கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், வேடநத்தம், கரிக்கலாம்பாடி, கனியாம்பூண்டி, சிறுநாத்தூர், குண்ணங்குப்பம், வழுதலங்குணம், தள்ளாம்பாடி, கல்பூண்டி, மேக்களூர், கத்தாழம்பட்டு, ஆராஞ்சி, சோமாசிபாடி, காட்டுகுளம், கழிக்குளம், சிங்கவரம், கெங்கனந்தல் உள்பட 32 கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை திருவண்ணாமலை (கிழக்கு) மின்வாரிய செயற்பொறியாளர் மு.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் வந்தவாசி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வந்தவாசி, கீழ்கொடுங்காலூர், புரிசை, தெள்ளார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.

சேத்துப்பட்டு கோட்டத்தைச் சேர்ந்த மழையூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மழையூர், பெரணமல்லூர், மோசவாடி, செப்டாங்குளம், கோதண்டபுரம், மேலச்சேரி, கோழிப்புலியூர், அரசம்பட்டு, மேலத்தாங்கல், தவணி, விசாமங்கலம், வல்லம், கடம்பை, சாத்தம்பூண்டி, வடவணக்கம்பாடி, தென்னாத்தூர், மடம், இசாகுளத்தூர், வயலூர், பூங்குணம், தேசூர் மற்றும் ஆனைபோகி ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேற்கண்ட தகவலை சேத்துப்பட்டு செயற்பொறியாளர் டி.ரவிச்சந்திரபாபு தெரிவித்துள்ளார்.