கடத்தல் 
செய்திகள்

வானூரில் இளம்பெண் கடத்தல்- பெற்றோர் போலீசில் புகார்

வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் கடத்தப்பட்டது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

விழுப்புரம்:

வானூர் தாலுகா நைனார்பாளையத்தை சேர்ந்த 22 வயதுடைய பெண், பி.எஸ்சி. நர்சிங் வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர், வானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், தங்கள் மகளை அரியலூர் மாவட்டம் புதுகுடி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (24) என்பவர் கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட பெண்ணையும், அவரை கடத்திச்சென்ற பிரபாகரனையும் தேடி வருகின்றனர்.