செய்திகள்

திண்டுக்கல் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்ற அரசு பஸ் டிரைவர்

திண்டுக்கல் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்ற அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவரது கணவர் புகார் அளித்துள்ளார்.

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள கொட்டப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது50). இவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

எனக்கும் ஜெயா (35) என்பவருக்கும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். நான் சாக்கு தைக்கும் தொழில் செய்து வருகிறேன். கடந்த சில நாட்களாகவே என் மனைவியின் நடத்தையில் சற்று மாற்றம் தெரிந்தது. சம்பவத்தன்று வேலை விட்டு வீட்டிற்கு வந்தபோது ஜெயா மாயமாகி இருந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

இது குறித்து எனது குழந்தைகளுடன் அடிக்கடி சில செல்போன் எண்களில் பேசி வந்ததாக கூறி உள்ளனர். அந்த எண்களை வைத்து அதே பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் என தெரிய வந்துள்ளது. அவரையும் தற்போது காணவில்லை. எனவே அவர்தான் எனது மனைவியை கடத்தி சென்றிருக்க கூடும் என சந்தேகம் அடைகிறேன். எனது மனைவியை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.