திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சு. தனியார் நிறுவன ஊழியர்.
நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மாலை 6 மணியளவில் ருக்மணியும், பார்த்தீபனும் வீட்டு முன்பு விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த வட மாநில பெண், சிறுமி ருக்மணியை சைகை காட்டி அழைத்தார். பயந்து போன அவர் அருகில் இருந்தவர்களிடம் கூறினார்.
மேலும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை ‘100’-க்கும் புகார் செய்தார். புல்லரம்பாக்கம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் தப்பி ஓட முயன்ற வடமாநில பெண்ணை மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசிடம் ஒப்படைத்தனர்.
அந்த பெண்ணுக்கு தமிழ்பேச தெரியவில்லை. இதனால் அவரிடம் விசாரணை நடத்துவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது. குழந்தை கடத்தல் பின்னணியில் அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் யார், யார்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள். #tamilnews