மாணவி கடத்தல் 
செய்திகள்

17 வயது மாணவியை கடத்தி திருமணம்- கமி‌ஷனர் அலுவலகத்தில் தந்தை புகார்

கோவையில் 17 வயது மாணவியை கடத்தி திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மாலை மலர்

கோவை:

கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஓண்டிப்புதூரை சேர்ந்த ஒருவர் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

எனது மகள் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். திடீரென அவர் மாயமானார். இது குறித்து சிங்கா நல்லூர் போலீசில் புகார் கொடுத்தோம். போலீஸ் விசாரணையில் எனது மகள் தேனி மாவட்டத்தில் ஒரு வீட்டில் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்று மகளை வீட்டிற்கு அழைத்து சென்றோம். அப்போது அங்கிருந்தவர்கள் போலீசில் எதுவும் புகார் கொடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்தால் உங்கள் மகளை அனுப்புகிறோம் என்றனர்.

அதன்படி நாங்களும் உறுதி அளித்து மகளை அழைத்தோம். அப்போது அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை. இது குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது நகையை அடமானம் வைத்து விட்டோம். ஒரு வாரத்தில் திருப்பி தருகிறோம் என்றனர். இதனை தொடர்ந்து மகளை அழைத்து வந்தோம். இங்கு வந்த பின்னரும் எனது மகள் மீண்டும் மாயமாகி விட்டார். இதனை தொடர்ந்து அவர் முன்பு இருந்த வீட்டாரிடம் கேட்டபோது உங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டோம் என்றனர்.17 வயது ஆகும் எனது மகளுக்கு எப்படி திருமணம் செய்து வைக்க முடியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.