கைது 
செய்திகள்

திருவோணம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: டிரைவர் கைது

10-ம் வகுப்பு மாணவியை கடத்தி காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருவோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள தோப்பு நாயக்கன் விடுதியை சேர்ந்த கருப்பையன் மகன் ரஜினி (வயது38) கார் டிரைவர்.

இவர் அதே பகுதியை சேர்ந்த 10-வகுப்பு மாணவி ஒருவரை கடத்தி சென்று ஒருநாள் முழுவதும் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த மாணவியை காரில் அழைத்து சென்று யாருமில்லாத இடத்தில் இறக்கிவிட்டு இதுபற்றி சொன்னால் கொலை செய்து விடுவேன், என்று மிரட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டார். அங்கிருந்து பஸ்சில் ஏறி வீட்டுக்கு சென்ற மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி பட்டுக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கன்னிகா வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கார் டிரைவர் ரஜினியை கைது செய்து பட்டுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தினார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிதிரேட்டு முத்து முருகன் உத்தரவிட்டார். அதன் பேரில் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் திருவோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.