சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய பேட்மிண்டன் அசோசியேசன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய பேட்மிண்டன் அசோசியேசன் தலைவர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் ‘‘டென்மார்க் ஓபனில் ஸ்ரீகாந்த் கிதாம்பி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதால் நாங்கள் பெருமையடைகிறோம்.
பேட்மிண்டன் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு நமது நாட்டுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறார்கள் என்பதை மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது’’ என்றார்.