சென்னை:
காங்கிரஸ் கட்சிக்குள் தனக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து குஷ்பு கூறியதாவது:-
நான் இந்திய காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். இளங்கோவன் மாநில தலைவராக இருந்த போதே நான் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் ஆகிவிட்டேன். இப்போது கூறும் குற்றச்சாட்டு ஆச்சரியமாக உள்ளது.
இந்த விசயங்கள் டெல்லி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். கராத்தே தியாகராஜன் சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. இதனால் தேவையில்லாத விவாதங்கள் வளர்ந்து கட்சிக்குத்தான் அசிங்கம். அதை நான் விரும்பவில்லை. அவர் சுமத்தியிருப்பது என் மீதான குற்றச்சாட்டு அல்ல. கட்சியின் நடைமுறைமீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
அவர் அவரது மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிக்கு நிறைய செய்யட்டும். மாவட்டத்தை பார்த்துக் கொண்டால் போதும்
இவ்வாறு அவர் கூறினார்.