செய்திகள்

விக்கெட்டை கைப்பற்றும்போது அளவிற்கு மீறி சந்தோசத்தை வெளிப்படுத்திய கலீல் அஹமதுக்கு அபராதம்

சாமுவேல்ஸை வீழ்த்தியபின் ஆத்திரமுட்டும் வகையில் சந்தோசத்தை வெளிப்படுத்திய இளம் பந்து வீச்சாளரான கலீல் அஹமதுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #INDvWI, #ICC

மாலை மலர்

பின்னர் 378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. ஷாய் ஹோப்பை (0) குல்தீப் யாதவும், பொவேலை (4) விராட் கோலியும் டைரக்ட் ஹிட் மூலம் ரன்அவுட் ஆக்க, இளம் வேகப்பந்து வீச்சாளரான கலீல் அஹமது ஹெட்மையர் (13), சாமுவேல்ஸ் (18), ரோவ்மேன் பொவேல் ஆகியோரை தனது இன்ஸ்விங் மற்றும் அவுட்ஸ்விங் பந்தால் வெளியேற்றினார்.

5 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கியமான மூன்று விக்கெட்டுக்களை சாய்த்து வெஸ்ட் இண்டீஸ் 153 ரன்னில் ஆல்அவுட் ஆக காரணமாக இருந்தார். சாமுவேல்ஸ் விக்கெட்டை வீழ்த்தியபோது, சாமுவேல்ஸ் அருகில் சென்று ஆத்திரமுட்டும் வகையில் உற்சாக மிகுதியால் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.