கோவை:
கோவை விமான நிலையத்தில் சுங்கவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோவை விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அதில் வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அபீஸ் என்பவரின் பையை சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வரப்பட்ட ரூ.10.65 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதேபோல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரீதின் ஏண்டோ என்ற வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் ரூ.10.80 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் வாலிபர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும்அவர்களிடம் இருந்த சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.