திருவனந்தபுரம்,
கேரளா மாநிலம் பாலோடில் உள்ள நன்னியோட் கிராமத்தை சேர்ந்த ஆர்.ஜே.ராஜி (வயது 33) என்ற பெண் அச்சமின்றி பாம்புகளை பிடிப்பதில் ஒரு சமூக சேவையாக செய்து வருகிறார். அவர் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த 9 மாதங்களில் 119 பாம்புகளை மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளார். ராஜிக்கு 2 மகள்கள் உள்ளனர். வீட்டில் பாம்பு புகுந்து விட்டால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இவரை தொடர்பு கொண்டு அழைக்கின்றனர். இரவு நேரத்தில் கணவருடன் சென்று இலாவகமாக பாம்புகளை பிடித்து விடுகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
"நான் பாம்புகளை பிடிக்க பணம் கேட்கமாட்டேன். சிலர் நன்கொடையாக அளித்தால், நான் அதை ஏற்கிறேன் மற்றும் பேரம் பேசுவது இல்லை. ஏழைகள் மற்றும் முதியவர்களிடம் நன்கொடை கூட வாங்குவதில்லை. 100க்கும் மேற்பட்ட பாம்புகள் ஆபத்தை உண்டாக்கியது என்றும், இதுவரை எந்த பாம்பும் கடிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
மக்களுக்கு உதவி செய்வதற்காக பாம்பு பிடிப்பதில் ஒரு சேவையாக கருதுகிறேன். வாழ்க்கையை பணயம் வைத்து செய்து வருகிறேன். அதனை நான் தொடருவேன் என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
அவரது செயல் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.