செய்திகள்

பனவடலிசத்திரத்தில் கேரளாவுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளி மாயம்

கேரளாவுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளி மாயமானது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் பனவடலி சத்திரம் அருகே உள்ள தெற்குபனவடலிசத்திரத்தை சேர்ந்தவர் கொடுங்குசாமி (வயது55). இவரது மனைவி மாடத்தி (47). கொடுங்குசாமி கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். மாதம் ஒரு முறை ஊருக்கு வந்து விட்டு செல்வது வழக்கம். 

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு வந்துவிட்டு பின்னர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அவரிடம் இருந்து எந்த வித தகவலும் இல்லை. பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லையாம். 

இது குறித்து மாடத்தி பனவடலிசத்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.