கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூரில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் ராபின் வடக்கும்சேரி (51) என்பவர் பாதிரியாராக இருந்து வந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 16 வயது சிறுமியை பாதிரியார் கொடூரமாக கற்பழித்துள்ளார். சில மாதங்களில் சிறுமி தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தை பெற்றார்.
பின்னர் போலீசாருக்கு அந்த சிறுமி கடிதம் ஒன்றை எழுதி தனது நிலையை விளக்கியுள்ளார். இதை தொடர்ந்தே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர், சிறுமி கற்பழிப்பு தொடர்பாக ராபின் வடக்கும்சேரியை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக 5 பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் மீது புகார் கூறப்பட்ட நிலையில் சில பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் தாமாக முன்வந்து கண்ணூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.