விமான போக்குவரத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி 
செய்திகள்

கேரளா விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

கேரள விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று விமான போக்குவரத்துறை மந்திரி அறிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியது.  இதில் விமானம் இரண்டாக உடைந்தது.

இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.  நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  அவர்கள் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கேரள விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று விமான போக்குவரத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.