எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

கேரள விமான விபத்து- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த விமான விபத்து சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த விமான விபத்து சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உறவுகளை இழந்தவர்களுக்கு அதனை தாங்கும் சக்தியை இறைவன் கொடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

கோவிட்-19 நெருக்கடியால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா விமானம் கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

இந்த துயரச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன் என பதிவிட்டுள்ளார்.