செய்திகள்

ஆசிரியர் செல்போன் பறித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை

கேரள மாநிலத்தில் ஆசிரியர் செல்போன் பறித்ததால் மனம் உடைந்த பிளஸ்-2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் குமரன்நல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயன்- ஷீலா தம்பதி மகன் ஜிஷ்ணு (வயது 17). இவர் இதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளிக்கூடத்திற்கு செல்போன் எடுத்துவர தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று பள்ளிக்கு செல்போனை ஜிஷ்ணு மறைத்து எடுத்துச்சென்றார். ஆசிரியர் பாடம் நடத்தும்போது செல்போன் மணி அடித்தது. இதனை கவனித்த வகுப்பு ஆசிரியர் செல்போனை மாணவரிடம் இருந்து பறித்தார். பின்னர் மாணவரின் பெற்றோரை வரவழைத்து ரூ.250 அபராதம் செலுத்தும்படி கூறினார். பெற்றோர் அபராதம் செலுத்தினர்.

பின்னர் பெற்றோருடன் மாணவரையும் ஆசிரியர் வீட்டுக்கு அனுப்பி விட்டார். ஆனால் செல்போனை திருப்பி தரமறுத்து விட்டார். இதில் ஜிஷ்ணு வேதனை அடைந்தார்.

வீட்டுக்கு சென்ற மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து போலீசார் வழக்குப்பபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT