செய்திகள்

லவ் ஜிஹாத்துக்கு எதிராக கேரள அரசு நடவடிக்கை எடுக்க தவறி விட்டது: யோகி ஆதித்யாநாத்

கேரளாவில் இந்து பெண்களை மதம்மாற்ற நடைபெற்றுவரும் லவ் ஜிஹாத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பினராயி விஜயன் தலைமையிலான அரசு தவறி விட்டதாக உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் குற்றம்சாட்டியுள்ளார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் நடைபெற்று கொண்டிருக்கும் பா.ஜ.க. மக்கள் யாத்திரையின் இரண்டாவது நாளான இன்று கண்னூர் மாவட்ட பாத யாத்திரையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் கலந்து கொண்டார்.

முஸ்லிம் வாலிபரை இந்துப் பெண் திருமணம் செய்ததை ரத்து செய்யும் அதிகாரம் ஐகோர்ட்டுக்கு உண்டா? என சுப்ரீம் கோர்ட் பரிசீலனை செய்யவுள்ள விவகாரம் தொடர்பாக நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த யோகி ஆதித்யாநாத், லவ் ஜிஹாத் என்பது மிகவும் பயங்கரமான பாணியாக பரவி வருகின்றது. இதை தடுப்பது தொடர்பாக கேரள அரசு நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. இவ்விவகாரம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது என குறிப்பிட்டார்.