ஸ்வப்னா சுரேஷ் 
செய்திகள்

உயிருக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தை நாடிய ஸ்வப்னா சுரேஷ்

கேரளா தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

மாலை மலர்

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தை பயன்படுத்தி கேரளாவிற்கு தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் ஸ்வப்னா சுரேஷ். இவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்குத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷ், தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.