திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மாவேலிக் கரை பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரகுமார். இவரது மனைவி மீனாட்சி. இந்த தம்பதியின் மகன் ரமேஷ்குமார் (வயது 32).
இவர்கள் 3 பேருமே டாக்டர்கள். நரேந்திரகுமார் அமெரிக்காவில் சொந்தமாக நடத்தும் ஆஸ்பத்திரியிலேயே அவர்கள் டாக்டர் பணி செய்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு ஆஸ்பத்திரி பணி முடிந்து டாக்டர் ரமேஷ்குமார் வீட்டிற்கு சென்றார். அதன் பிறகு மறுநாள் காலை அவர் கார் மூலம் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் ஆஸ்பத்திரியை சென்றடைய வில்லை.
இதனால் ரமேஷ்குமாரின் செல்போனுக்கு அவரது பெற்றோர் தொடர்பு கொண்டனர். ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆஸ்பத்திரியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் சாலையோரத்தில் ரமேஷ் குமாரின் கார் நின்று கொண்டிருந்தது தெரிய வந்தது.
அருகில் சென்று பார்த்தபோது துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் டாக்டர் ரமேஷ்குமார் காரில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார் கள்.
டாக்டர் ரமேஷ்குமாரை சுட்டுக்கொன்றது யார்? எதற்காக இந்த கொலை நடந்தது என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.