செய்திகள்

கண் சிமிட்டும் பாடலுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆதரவு

கண் சிமிட்டும் பாடலுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்து அவரது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் ஒரு அடார் லவ் படத்தில் வரும் மாணிக்க மலராய பூவே என்ற பாடல் மத உணர்வுகளை புண்படுத்துவதாக ஒரு அமைப்பினர் ஐதராபாத் போலீசில் புகார் கொடுத்தனர். இதுபற்றி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அவரது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

கேரளாவில் பிரசித்திப் பெற்ற மாப்பிள்ளை பாட்டைதான் இந்த படத்தில் ரீமிக்ஸ் செய்து எடுத்துள்ளனர். இந்த பாடல் முஸ்லிம் திருமண வீடுகளில் பல ஆண்டுகளாக பாடப்பட்டு வருகிறது.

இப்போது வெளியான மாணிக்க மலராய பூவே என்ற பாட்டில் மத உணர்வு புண்பட்டிருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. மத அடிப்படைவாதிகளுக்கு எப்போதும் கலை உணர்வுகள் பிரச்சினையை கொடுக்கும்.

கலையும், இலக்கியமும் தான் இதுபோன்ற அடிப்படைவாதிகளை எதிர்க்கும் வலுவான ஆயுதம். அதற்கு நாம் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #tamilnews